தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்ற செய்தியை இந்தியா தெளிவாக எடுத்துரைத்துள்ளது - எஸ்.சிறிதரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்ற செய்தியை இந்தியா தெளிவாக எடுத்துரைத்துள்ளது - எஸ்.சிறிதரன்

ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழ் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படு கொலைகளுக்கான, அவர்கள் மீது புரியப்பட்ட போர் குற்றங்களுக்கு எதிரான, அவர்களுக்கு நீதிக்கு புறம்பாக நடைபெற்ற கொலைகளுக்கு எதிராக, சொத்தழிவுகளுக்கு எதிராக ஒரு நீதி வேண்டுமென்ற அடிப்படையில்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் உரையாற்றிய பல இடங்களில் இந்த நாட்டில் ஒரு தமிழினம் இருப்பதாக, அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக கூறியதுமில்லை. ஏற்றுக் கொண்டதுமில்லை. அவரின் கிராம மட்ட சந்திப்புக்கள் கூட இதுவரை வடக்கிலோ கிழக்கிலோ நடந்ததுமில்லை. 

அமைச்சர்கள் இனவாதத்தை கக்குகின்றார்கள். இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாடகதைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment