பசறை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் உள்ளே...! - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

பசறை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் உள்ளே...!

பசறையில் பஸ் விபத்தில் உயிரிழந்த 14 பேரின் இறுதி சடங்குகளிலும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் பங்குபற்றினர்.

அத்துடன், உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறி இறுதிச் செலவுகளுக்கான நிதி உதவிகளையும் வழங்கி வைத்தனர். 

ஆரம்ப கட்டமாக இறுதி சடங்குகளை செய்வதற்காக 15 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் ஆளுநரின் ஊடாக இழப்பீட்டு நிதியை பெற்றுக் கொடுக்கவும் செந்தில் தொண்டமான் நடவடிக்கக எடுத்துள்ளார்.

பசறை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம்

பதுளை செங்கலடி வீதியில் பசறை 13ஆம் கட்டை மெத்தைக்கடைக்கு அருகாமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

01.ராமன் நாகரட்ணம்
வயது 68
டெமேரியா,
B டிவிஷன், 
மீதும்பிடி, 
பசறை.

02. பாக்கியநாதன் யோகதாஸ்
வயது 48
டெமேரியா B டிவிஷன் மீதும்பிடி,
பசறை.

03. ஜெகதுன் பீபி
வயது 86
24ம் கட்டை, வெல்லவல,
லுணுகலை.

04. ஆதா சாய்பு பாத்திமா உம்மா
வயது 47
24ம் கட்டை வெல்லவல, 
லுணுகலை. 

05. சுப்பிரமணியம் ராஜேந்திரன்
வயது 55
சோலன்ஸ் மேல் பிரிவு,
லுணுகலை. 

06. ரத்னாயக முதியன்சலாகே ஹன்சிகா சந்தமாலி
வயது 25
ஏதன்ட வத்த யப்பாம ஹொப்டன், 
லுணுகலை.

07. தென்னகோன் முதியன்சலாகே அசங்க பத்மகுமார
வயது 35
யன உதான கம்மான யப்பாம டிவிஷன்,
ஹொப்டன், 
லுணுகலை. 

08. முத்தையா முருகேசன்
வயது 71
19ம் கட்டை ஹொப்டன், 
லுணுகலை.

09. பொன்னழகன் டானில் ஹரிஹரன்
வயது 40
வட்டுவத்த அத்துடுவெல்ல, 
ஹாலிஎல.

10. மகேந்திர ஹாரியலாகே நாவிந்த தக்சரனி
வயது 21
இல 51 ,
செவன திஸ்ஸபுர, 
லுணுகலை. 

11. அந்தோணி நோவா
வயது 32
இல 51, செவன திஸ்ஸபுர, 
லுணுகலை.

12. செல்லையன் சுப்பிரமணியம்
வயது 73
தேஷ்போக் டிவிஷன் சோலன்ஸ் தோட்டம்,
லுணுகலை. 

13. பெருமாள் முரளிதரன்
வயது 46
31/51/01
லுணுகலை.

14. பெனடிக் மெரோனா
வயது 31
அடாவத்தை, 
லுணுகலை. 

அத்துடன் 33 பேர் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதோடு 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லுணுகலை நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad