கம்போடியா நாட்டில் கொரோனா தொற்றினால் முதல் மரணம் பதிவானது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

கம்போடியா நாட்டில் கொரோனா தொற்றினால் முதல் மரணம் பதிவானது

கம்போடியா நாட்டில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் வியாழக்கிழமை  பதிவானது.

அதன்படி கடலோர நகரான சிஹானுக்வில்லேயில் அமைந்துள்ள சீன நுறுவமொன்றில் சாரதியாக பணிபுரிந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் கெமர்-சோவியத் நட்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் தொடங்கியதிலிருந்து மொத்தம் 1,124 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுகள் மாத்திரம் கம்போடியாவில் பதிவாகியுள்ளன.

கம்போடியா ஆசியாவில் மிகக் குறைவான கொரோனா நோயாளர்களை கொண்ட ஒரு நாடாகும். இருப்பினும் பெப்ரவரி 20 முதல் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad