சொந்த நாட்டுக்கு வர இலஞ்சம் கொடுக்கவும், பேரணியில் நிற்கவும், போராட்டங்களில் ஈடுபடவும் வேண்டியுள்ளது - முஜிபுர் ரஹூமான் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

சொந்த நாட்டுக்கு வர இலஞ்சம் கொடுக்கவும், பேரணியில் நிற்கவும், போராட்டங்களில் ஈடுபடவும் வேண்டியுள்ளது - முஜிபுர் ரஹூமான்

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டுக்கு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் இந்நாட்டவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, சிலர் முகாம்களிலே உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களை அழைத்து வருவதற்கான வாய்ப்பு இருந்தும் அரசாங்கம் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருக்கின்றது. 

எமது நாட்டில் மாத்திரமே சொந்த நாட்டுக்கு வருவதற்காக இலஞ்சம் கொடுக்கவும், பேரணியில் நிற்கவும், போராட்டங்களில் ஈடுபடவும் வேண்டியுள்ளது.

இந்நிலையில் அவர்களிடமிருந்து மேலும் பணம் பறிப்பதை நிறுத்தி விட்டு, அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad