ஆட் கடத்தல் காரர்களால் கடலுக்குள் வீசப்பட்ட 80 பேரில் 20 பலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

ஆட் கடத்தல் காரர்களால் கடலுக்குள் வீசப்பட்ட 80 பேரில் 20 பலி

கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபுட்டியில் இருந்து யெமனுக்கு பயணித்த கப்பலில் இருந்து ஆட் கடத்தல் காரர்களால் 80 பேர் கடலுக்குள் வீசப்பட்ட நிலையில் குறைந்தது 20 தஞ்சக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருப்பதாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை புறப்பட்ட இந்தப் படகில் 18 வயதுக்கு கீழான சிறுவர்கள் உட்பட 200 தஞ்சக் கோரிக்கையாளர்கள் இருந்த நிலையில் படகில் அளவுக்கு அதிகமானவர்கள் இருப்பதாக ஆட் கடத்தல்காரர்கள் கூச்சலிட்டுள்ளனர் என்று அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் உயிர் தப்பியவர்கள் டிஜிபுட்டியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை.

வறுமையில் இருந்து தப்பும் முயற்சியாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தை அடைய எத்தியோப்பியா அல்லது சோமாலிய நாட்டவர்கள் டிஜிபுட்டி கடற்பகுதியை பயன்படுத்துவது வழக்கமாகும்.

கடந்த ஒக்டோபரிலும் இது போன்று படகில் இருந்து இறக்கப்பட்ட குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment