கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு - கம்பஹாவில் 6 மணித்தியாலம் - களுத்துறையில் 18 மணித்தியாலம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு - கம்பஹாவில் 6 மணித்தியாலம் - களுத்துறையில் 18 மணித்தியாலம்

அவசர திருத்த வேலை காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இன்று (23) இரவு 8.00 மணி வரை, கறுவாத்தோட்டம், தெமட்டகொடை, மருதானை, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், புதுக்கடை(கொழும்பு 07, 09, 10, 12) பகுதிகளில் நீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டிருக்கும் என சபை அறிவித்துள்ளது.

அத்துடன், கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுபிட்டி, பொரளை, புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை (கொழும்பு 01, 02, 03, 08, 11, 13) ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று முற்பகல் 9.00 மணி முதல் 6 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (23) பிற்பகல் 3.00 மணி வரை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே, பேலியாகொடை ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படும் என சபை அறிவித்துள்ளது.

சபுகஸ்கந்த உப மின் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய அத்தியவசிய பழுதுபார்த்தல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (24) காலை 8.00 மணி முதல் களுத்தறையின் சில பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வாதுவை, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, மொல்லிகொட, மொரந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad