குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 25,000 ரூபா கோரி ஆர்ப்பாட்டம் - லோட்டஸ் வீதி மூடல் - கொழும்பின் பல பகுதிகளில் வாகன நெரிசல் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 25,000 ரூபா கோரி ஆர்ப்பாட்டம் - லோட்டஸ் வீதி மூடல் - கொழும்பின் பல பகுதிகளில் வாகன நெரிசல்

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ரூபா. 25,000 ஆக்குதல் உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முனவைத்து, ஒரு சில தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளன.

இதன் காரணமாக, கொழும்பிலுள்ள லேக் ஹவுஸ் சுற்று வட்டத்திற்கு அருகில், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும், லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளுதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை ரூபா. 15,000 இனால் அதிகரித்தல், தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ரூபா. 25,000 ஆக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று (23) முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து நிதி அமைச்சு வரை முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, அங்கிருந்து பேரணியாக கொழும்பு லோட்டஸ் வீதியை அடைந்துள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு புறக்கோட்டை மற்றும் குறித்த பகுதியைச் சுற்றியுள்ள பிரதான மற்றும் உள் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad