மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடரும் போராட்டங்கள் - ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 3, 2021

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடரும் போராட்டங்கள் - ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை (மார்ச் 3) குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் மியன்மார் கொந்தளிப்பில் உள்ளது, சிவில் தலைவர் ஆங் சான் சூகியை இராணுவம் வெளியேற்றி தடுத்து வைத்தது, நாட்டின் தசாப்த கால ஜனநாயகத்திற்கான பரிசோதனையை முடிவுக்குக் கொண்டு வந்து தினசரி வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினர்.

தற்சமயம் மியன்மாருக்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. அது மாத்திரமன்றி மேற்கத்திய சக்திகளின் பொருளாதார தடைகளும் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளை பலமுறை தாக்கியுள்ளன.

ஆனால் இராணுவ அரசாங்கம் இதுவரை உலகளாவிய கண்டனத்தை புறக்கணித்து, மக்களின் ஜனநாயக மீட்பு எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக ஒடுக்குமுறையை அதிகரித்து வருகிறது.

மியன்மாருக்கான ஐ.நா தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "சதி நடந்ததிலிருந்து இன்று மிகவும் இரத்தக்களரியான நாள்" இன்று மாத்திரம் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடரும் போராட்டங்களில் மொத்தம் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று கூறினார்.

அத்துடன் அவர் மியன்மார் ஜெனரல்களுக்கு எதிராக ஐ.நா "மிகவும் வலுவான நடவடிக்கைகளை" எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை ஆட்சி கவிழ்ப்பிலிருந்து கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம், 1,498 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

No comments:

Post a Comment