(செ.தேன்மொழி)
வீதி விபத்துக்கள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வீதி விபத்துகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுள் எட்டு பேர் இன்றையதினம் இடம்பெற்ற விபத்துகளிலும், ஏனைய மூவரும் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள் பயணித்த நால்வர், பாதசாரிகள் மூன்று மற்றும் ஏனைய வாகனங்களில் பயணித்த நால்வர் உள்ளடங்குகின்றனர்.
இந்த காலப்பகுதிகளில் இடம்பெரும் பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைப்பாடு, தூக்கம், வீதிகளில் காணப்படும் குழறுபடிகள் தொடர்பில் கவனம் செலுத்தாமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையே காரணமாக விளங்குகின்றன.
சாரதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பலர் சுற்றுலா பயணங்கள் செல்வதற்கு தீர்மானித்திருக்கலாம்.
இவ்வாறு செல்லும் போது வாகன சாரதிகளுக்கு மதுபானங்களை வழங்குவதை தவிர்த்துக் கொள்வதுடன், அவர்களை எப்போதும் கவனமாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தல்களை செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment