தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகத்திற்கு பதிலாக ஐவரடங்கிய முகாமைத்துவக் குழுவொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டு அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன் அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே 20ஆம் திகதி, இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் இடம்பெறும் வரை, தற்போதுள்ள நிர்வாகத்திற்கு பதிலாக குறித்த 5 பேர் கொண்ட குழு நியிமிக்கப்படவுள்ளது.
நாளையதினம் (29) குறித்த குழுவை பெயரிட எதிர்பார்த்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment