ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் உப குழுவின் அறிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் உப குழுவின் அறிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (05) ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் செயலாளர், ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹனதீர குறிப்பிட்டார்.

அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்பு தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பிலும் அமைச்சரவை உப குழுவினால் ஆராயப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad