மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று (30) மாலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 46 கிலோ கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப பொலிஸ் பரிசோதகர் விவேகாணந் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad