கொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல் - News View

Breaking

Post Top Ad

Friday, March 5, 2021

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்

நாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலவிலிருந்து கொலன்னாவை வரையில் நீர் விநியோகிக்கும் குழாயின் பாதையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் காரணமாக, இவ்வாறு நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை, கொலன்னாவை, இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, நாவல, கொஸ்வத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad