மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தொடர்ச்சியாக பூட்டு - ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் 15 இல் திறப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, March 7, 2021

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தொடர்ச்சியாக பூட்டு - ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் 15 இல் திறப்பு

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் முன்னர் அறிவித்தது போல் எதிர்வரும் 15ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகளுக்காக மீளத் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதனால் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளை இரண்டு கட்டங்களாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad