உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கொரோனா ஆய்வு அறிக்கைக்கு 14 நாடுகள் கண்டனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கொரோனா ஆய்வு அறிக்கைக்கு 14 நாடுகள் கண்டனம்

கொரோனா வைரஸ் பரவலின் தொடக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையை 14 நாடுகள் சாடியுள்ளன.

அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அந்த அறிக்கையைப் பற்றி குறை கூறின.

இவ்வாண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் உலக சுகாதார அமைப்பின் விசாரணையாளர்கள், வைரஸ் பரவல் தொடங்கியதாக நம்பப்படும் சீனாவின் வூஹான் நகரில் 4 வார விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களும், சீன அறிவியல் அறிஞர்களும் இணைந்து அது தொடர்பில் இறுதி அறிக்கையை வெளியிட்டனர்.

கொரோனா வைரஸ் வெளவால்களிடமிருந்து, மற்றொரு விலங்கு மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 

சீன ஆய்வு கூடத்தில் இருந்து அந்த வைரஸ் பரவியிருக்கக் கூடிய சாத்தியம் மிகக் குறைவே என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது.

ஆனால், விசாரணையாளர்கள் மிக விரைவில் முடிவெடுத்திருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கூறுகின்றன. 

மறுபுறம் இது பற்றி முடிவு ஒன்றுக்கு வருவதற்கு மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad