1000 ரூபா கொடுப்பனவை இன்று முதல் வழங்க வேண்டும் : தொழில் ஆணையாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

1000 ரூபா கொடுப்பனவை இன்று முதல் வழங்க வேண்டும் : தொழில் ஆணையாளர் தெரிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை இன்று முதல் தோட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான வர்த்தமானியை இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் 5 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக ஆயிரம் ரூபாவை வழங்க வேணடுமென்று அண்மையில் சம்பள நிர்ணய சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment