மத்திய வங்கி முறி மோசடி வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை - விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக CID நீதிமன்றுக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

மத்திய வங்கி முறி மோசடி வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை - விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக CID நீதிமன்றுக்கு அறிவிப்பு

ரவி கருணநாயக்க, அர்ஜுன் மஹேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான மத்திய வங்கி முறி மோசடி வழக்கை, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்துமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 29, 31 ஆகிய தினங்களில் இடம்பெற்ற மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 11 பேர் மீதான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (11) கோட்டை நீதாவன் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

அதன்படி, அதனுடன் தொடர்புடைய விசாரணைக் கோப்புகள் சட்டமா அதிபரிடம் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சிஐடியினர் மன்றுக்கு அறிவித்தனர்.

இவ்வழக்கில், குறித்த சம்பவம் தொடர்பில் ரூ. 51.98 பில்லியன் அரசாங்க நிதி முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment