இந்திய மீனவர்கள் எவரும் இலங்கை சிறையில் இல்லை, மீதமுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை - பிரதமர் மோடி உத்தரவாதம் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

இந்திய மீனவர்கள் எவரும் இலங்கை சிறையில் இல்லை, மீதமுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை - பிரதமர் மோடி உத்தரவாதம்

இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் உரிமை குறித்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர், மீனவர்களின் உரிமையுடன் கூடிய நலன்களை மத்திய அரசாங்கம் எப்போதும் பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார்.

அங்கு மோடி மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டபோதெல்லாம் அவர்கள் கூடிய விரைவில் விடுதலை செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

எனது பதவிக் காலத்தில் 16,000 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்திய மீனவர்கள் எவரும் இலங்கை சிறையில் இல்லை. மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன்.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என மோடி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad