இலங்கையில் இந்தியாவின் பாரிய அபிவிருத்திகள் தொடரும், சீனாவுக்கு தொடர்பில்லை நான் அவ்வாறு கருதவுமில்லை - தினேஷ் குணவர்தன - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

இலங்கையில் இந்தியாவின் பாரிய அபிவிருத்திகள் தொடரும், சீனாவுக்கு தொடர்பில்லை நான் அவ்வாறு கருதவுமில்லை - தினேஷ் குணவர்தன

இந்தியா இலங்கையில் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களும் இந்தியாவின் முதலீடுகளும் இலங்கையில் தொடரும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தினை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை சீனா தூண்டிவிட்டது என வெளியாகும் தகவல்கள் குறித்த கேள்விக்கு வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை பலதரப்பட்டவர்கள் இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்தியாவின் பாரிய திட்டங்களும் பாரிய முதலீடுகளும் தொடரும் என தெரிவித்துள்ள அமைச்சர், சீனாவிற்கு ஆர்ப்பாட்டங்களில் தொடர்பில்லை. நான் அவ்வாறு கருதவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு கொள்கலன் முனைய திட்டம் கைவிடப்பட்டுள்ளமை இந்தியா இலங்கைக்கு இடையிலான உறவுகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவானவை. பல வருட வரலாற்றை கொண்டவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad