திலகரின் பதவிக்கு வைலட் - திகாம்பரம் அதிரடி முடிவு - தொழிலாளர் தேசிய முன்னணி ஏகமனதாக தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

திலகரின் பதவிக்கு வைலட் - திகாம்பரம் அதிரடி முடிவு - தொழிலாளர் தேசிய முன்னணி ஏகமனதாக தீர்மானம்

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீட உறுப்பினர் வைலட் மேரி, தொழிலாளர் தேசிய முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தொழிலாளர் தேசிய முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றைய தினம் கூடியது.

இதன்போது இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

தொழிலாளர் தேசிய முன்னணியின் உதவி பொதுச் செயலாளராக கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியில் முன்னதாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திரசிகாமணி நேற்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது பதவி நீக்கப்பட்டதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad