ஜப்பானில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அரசு - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

ஜப்பானில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அரசு

ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

ஜப்பானில் 4.10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6772 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் நீடிக்கிறது. கொரோனாவின் மூன்றாவது அலை தொற்றும் பரவி வருகிறது.

கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் திகதி தொடங்க உள்ளதால், அதற்கு முன்பாக மூன்றாவது அலை நோய்த் தொற்றுகளை தணிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும்.

அடுத்த வார மத்தியில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்றும், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மத்தியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad