உயிர்த்த ஞாயிறு அறிக்கை முழுமையாக ஆராய்ந்து சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை - பாதிக்கப்பட்டோருக்கும் அரசு நியாயம் வழங்கும் என்கிறார் அமைச்சர் சமல் - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

உயிர்த்த ஞாயிறு அறிக்கை முழுமையாக ஆராய்ந்து சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை - பாதிக்கப்பட்டோருக்கும் அரசு நியாயம் வழங்கும் என்கிறார் அமைச்சர் சமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்கான குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

கதிர்காமப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 

அத்துடன், அறிக்கையின் பரிந்துரையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் சொத்துக்கள் மக்களின் நலனுக்காகப் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்திச் செய்யப்படும். மாறாக சொத்துக்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad