இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தடுப்பூசி - ஆப்கானிஸ்தான் தூதுவர் நேற்று ஏற்றிக் கொண்டார் - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தடுப்பூசி - ஆப்கானிஸ்தான் தூதுவர் நேற்று ஏற்றிக் கொண்டார்

இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கும் செயற்றிட்டம் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படுகின்றது. 

அதற்கமைய இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரி, கொரோனா தடுப்பூசியை நேற்று ஏற்றிக் கொண்டார்.

இந்நிலையில் அது தொடர்பிலான புகைப்படமொன்றை தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதேவேளை அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளான கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் உள்ளவர்களுக்கே தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்த மாவட்டங்களில் பதிவானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது பட்டியல் எதுவும் இல்லை என்றும் தடுப்பூசி பெற தயாராக உள்ளவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment