கொழும்பு பல்கலைக்கழகம் - பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்திற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

கொழும்பு பல்கலைக்கழகம் - பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்திற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது

(எம்.மனோசித்ரா)

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹோர் பொருளாதார நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

இரு தரப்புக்கும் பயன்கள் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஆராய்ச்சிப் பொருட்கள், வெளியீடுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்தல், இரு நிறுவனங்களும் கூட்டாக மற்றும் தனிப்பட்ட ஆய்வுக் கருத்திட்டங்களை ஊக்குவித்தல், திறன்கள் மற்றும் இயலுமைகளுடன் கூடிய மாணவர் பரிமாற்று நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் அனுபவங்களைப்  சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹோர் பொருளாதார நிறுவனம் என்பன புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கல்வியலாளர் குழு ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad