ஜெனீவாவில் இந்தியாவிடம் ஆதரவு கோரும் இலங்கையின் கடிதத்துக்கு இன்னமும் பதில் இல்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

ஜெனீவாவில் இந்தியாவிடம் ஆதரவு கோரும் இலங்கையின் கடிதத்துக்கு இன்னமும் பதில் இல்லை

ஐ. நா. மனித உரிமை பேரவை அமர்வில் இந்தியாவின் ஆதரவை கோரி இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமான பதிலை வழங்கவில்லை. 

மனித உரிமை பேரவை அமர்வில் இந்தியாவின் ஆதரவைக் கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஜெனீவா அமர்வில் இந்தியா ஆதரவளிக்கவேண்டுமென மோடியிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தியா இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் அறிவிக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இந்தியா சாதகமான விதத்தில் பதிலளிக்குமென எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment