இந்த நாட்களில் ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நல்லாட்சியில் ஏற்பட்ட சில பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வேறு தரப்பினர்களே இதை மேற்கொண்டார்களே தவிர நல்லாட்சி அரசாங்கம் இதை செய்யவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
நேற்றைய (24) ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இத்தாக்குதலுடன் தொடர்பான உன்மையான பயங்கரவாதிகள் யார் என்று நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அதிகாரம் உள்ள அரசாங்கம். மூன்றில் இரண்டு பொருன்பான்மை உள்ள அரசாங்கம். ஈஸ்டர் தாக்குதலை வைத்து நாட்டில் இனவாதத்தை தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளைத்தான் முன்னெடுத்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்களே தவிர புதிதாக ஒன்றும் மேற்கொள்ளவில்லை. இந்த அறிக்கையை ஆராய ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்களை நியமித்துள்ளனர்.
அறிக்கையை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் இறுதி நோரத்தில் உன்மையான சட்டத்தரணிகளைக் கொண்டுதான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதா? ஏதேனும் அறிக்கையின் பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் எமக்குள்ளது.
விசாரணைகளை முன்னெடுத்த இந்த தாக்குதலை தடுக்க முடியாதவர்களின் விடயங்களை முன்னிலைப்படுத்தித்தான் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான பின்னனிகள் இயக்கியவர்கள், பணம் வழங்கியவர்கள், பலமிக்க இந்தியாவின் உளவுத்துறைக்கு முன் கூட்டியே இந்த புலனாய்வு தகவல் எவ்வாறு தெரியவந்தது? சாரா யார்? அபு யார்? கடல் மார்க்கமாக இவர் யாருடைய உதவியுடன் இந்தியாவிற்கு சென்றார்? உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
கத்தோலிக்க மக்களையும், கர்தினல் அவர்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றாமல் உன்மையைக் கூறி உனமையான பயங்கரவாதிகள் யார் என்பதை தெரியப்படுத்துமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம். இல்லை என்றால் நாட்டு மக்களுடன் வீதிக்கு இறங்கி இந்தப் பிரச்சிணைக்கு தீர்வு காண முற்பட பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் மேலும் தொரிவித்தார்.
ஜனாதிபதி மரக் கண்றுகளை நட்டும் தேசிய வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். மரக் கன்று ஒன்றை நட்டி மறுபக்கம் காடழிப்பை மேற்கொள்கிறார். இது சிறந்த செயற்திட்டம் என்றுதான் கூற வேண்டும் என்றும் இத்தகைய காடழிப்புகளை அரசாங்கமே மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment