கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ் நேற்றையதினம் மாத்திரம் 32 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நலின் அரியரத்ன தெரிவித்தார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 03 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுள் அடங்குவர்.
அவர்களுள் 14 பேர் கட்டுநாயக்க பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர்.
இதேவேளை ஏனைய 12 கொரோனா நோயாளர்கள் சீதுவ சுகாதாரப் பிரிவின் கீழ் பதிவாகியுள்ளனர். குறித்த பரிவுகளில் இதுவரை 908 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கேகாலையில் உள்ள பின்னவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment