பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம் : அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம் : அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம் என நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டு கல்வியலாளர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களின் போது யாழ். மக்களுடன் தொடர்புகளை பேணி வந்து இருக்கின்றேன். நமது மத்திய வங்கியின் வடக்கு அலுவலகம் உட்பட ஏனைய வங்கியின் அலுவலங்கள் தொடர்பில் இங்கே பல நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். அத்தோடு கொழும்பை தளமாக கொண்ட வங்கிகளின் உப அலுவலகங்களில் கூட இங்கே யாழ்ப்பாணத்தில் விரிவாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் விவசாய நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருப்பதை நான் அவதானித்தேன். யாழ்ப்பாணத்தை பொறுத்த வரைக்கும் விவசாயத்துக்கான நீர் பெறுவதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் கூட விவசாயிகள் விவசாயத்தை மிகவும் சிறப்பாக மேற்கொள்கிறார்கள் அதாவது எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என வயல்களும் தோட்டங்களும் காட்சியளிக்கின்றது என்றார்.

வெளிநாட்டு செலாவனியை குறைத்து உள்ளூர் மூதலிட்டாளர்களின் ஊக்குவிப்புக்களை பொருளாதார ரீதியான தொழில் நிர்பந்தமான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது பொருளாதார ரீதியான பின்னடைவுகள் எற்பட்டுள்ளது. அதற்கான புதிய வசதிகளூடான தொழில் முயற்சிகளை எற்பட்டுத்துவதற்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். 

குறிப்பாக பல்கலைக்கழங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் அதிகம் உள்ளனர். தொழில் வாய்ப்பு அற்ற நிலையில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பினை விரிவுபடுத்தவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பீட பேராசிரியர்கள், நிர்வாக அலகு அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

இவ் சந்திப்பில் கலந்துகொண்ட நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்தார்.

இங்கு பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள், மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்காக திட்ட முன்மொழிவுகள் பற்றியும் விவசாயம், முகாமைத்துவம், வர்த்தகம், மருத்துவம், நிதி முகாமைத்துவம் துறைசார்ந்த பேராசிரியர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித் தலைவரும் மாவட்ட இணைத்தலைவர் ஆகிய அங்கஜன் இராமநாதன், நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் உயர்அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். நிருபர் ரமணன்

No comments:

Post a Comment