நீண்ட காலத்திற்கு பின் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை, நடைபாதை வியாபாரமும் வழமைக்கு திரும்பி வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலா துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தன. இதனால் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள், படகு சவாரி, போனி சவாரி உள்ளிட்ட பல துறைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தன.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று (26) மூன்று நாட்கள் தொடர் விடுமுறையினை தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா நோக்கி வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
இதனால் நடை பாதை வர்த்தக நடவடிக்கைகள் வழமை நிலைக்கு திரும்பி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பல மாத காலமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறைகள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் நாட்டினதும் பொதுமக்களினதும் சுற்றுலா வருபவர்களினதும் பாதுகாப்பு கருதி சுகாதார வழி முறைகளை முறையாக கடைபிடித்து தங்களது உல்லாசங்களை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதே கடந்த காலங்களில் மக்கள் நடமாற்றிமின்றி காணப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற நீர் வீழ்ச்சிகளான சென்கிளையார், டெவோன் ஆகிய நீர் வீழ்ச்சிகளின் காட்சி காண் கூடங்களில மக்கள் நிரம்பி இருந்தனர்.
இதனால் இந்த பிரதேசங்களில் நடைபாதை வர்த்தக நடவடிக்கைளும் சூடுபிடித்திருந்தன.
மலையக நிருபர் சுந்தரலிங்கம்
No comments:
Post a Comment