கடைசி நிமிடத்தில் இராஜினாமா செய்த சமிந்த வாஸ் - சம்பள பிரச்சினையே காரணம் என தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

கடைசி நிமிடத்தில் இராஜினாமா செய்த சமிந்த வாஸ் - சம்பள பிரச்சினையே காரணம் என தெரிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார்.

இலங்கை அணி மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணத்திற்கு செல்லவிருந்த கடைசி நேரத்தில் இன்றையதினம் (22) அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும் அறித்துள்ளதாக, கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி இன்று நள்ளிரவு கடந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படவுள்ள நிலையில், அதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவ்வாறு தனது இராஜினாமாவை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்நேரத்தில், அவர் தனது தனிப்பட்ட பண நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் விலகுவது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.

ஆயினும், நாட்டின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் சமிந்த வாஸ், நாட்டிற்கு பல ஆண்டுகளாக சேவை செய்தமை தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையில், ஏற்கனவே செலுத்திய சம்பளத்திற்கு மேலதிகமாக அதிக தொகையை சம்பளமாக கோரும் நியாயமற்ற கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்துள்ள நிலையில், இவ்வாறு அவர் நடந்து கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த டேவிட் சேகர் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (19) மேற்கிந்திய தொடருக்கான, பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment