எவரும் வரலாம், எவரும் போகலாம், எமது பயணம் தொடரும் - மனோ கணேசன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

எவரும் வரலாம், எவரும் போகலாம், எமது பயணம் தொடரும் - மனோ கணேசன்

எவரும் வரலாம், எவரும் போகலாம். எங்கள் முற்போக்குப் பயணம் தொடருமென்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு மலையக சமகால வரலாற்றில், தமிழ் முற்போக்குக் கூட்டணி அதிகாரத்தில் இருந்த காலமே, அதிக காத்திரமான காரியங்கள் நிகழ்ந்த பொற்காலம். மனசாட்சியுள்ள எவரும் இதை மறுத்திட முடியாது. 

ஆரம்பித்து முடிவுராத பல காரியங்கள் இன்னமும் உள்ளன. அவற்றை முடித்திட நாம் மீண்டும் எழுந்து அதிகாரத்துக்கு வருவோம். அதுவரை எதிரணியில் இருந்து காத்திரமான தேசிய பணியை நாம் ஆற்றுகிறோம்.

கீழ்வரும் ஆவணம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின், 2015 முதல் 2019 வரையிலான நான்கு (4) வருட சாதனைகளை பட்டியலிடுகிறது.

எங்கள் முழு ஆட்சிக் காலம், 2018 வருட ஒக்டோபர் மாத அரசியலமைப்பு சதியின் மூலமும், பின் 2019ஆம் வருடம் முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனாலும், அதிகாரத்தில் இருந்த காலம் நான்கு (4) வருடங்களாக சுருங்கியது. 

இந்த நான்கு (4) வருட சாதனைகளை, எங்களுக்கு முன் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்து, 1978 முதல் 2015 வரை சுமார் நாற்பது (40) வருட காலமாக, மாறி மாறி வந்த ஒவ்வொரு ஆட்சியிலும் அதிகாரத்தில் இருந்த ஏனைய “கட்சிகளின்” செயற்பாட்டுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

1. தோட்டங்களில் ஏழு பேர்ச் காணி வழங்கலுக்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2. நீண்ட காலமாக நின்று போயிருந்த, இந்திய அரசின் பெருந்தோட்ட வீடமைப்பு உதவி திட்டம், இலங்கை - இந்திய அரசுகளின் ஒப்புதலுடன், இந்திய அரசுக்கும், புதிய மலைநாட்டு கிராமங்கள் அமைச்சுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, நடைமுறைக்கு வந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad