நீர்கொழும்பு சிறைக்குள் பல்வேறு பொருட்களை வீச வந்த இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

நீர்கொழும்பு சிறைக்குள் பல்வேறு பொருட்களை வீச வந்த இருவர் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள், கையடக்கத் தொலைபேசி, ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களை வீச வந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் வீதிச் சோதனை சாவடியொன்றை அமைத்து பொலிஸாரார் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களை இன்றையதினம் (14) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (13) காலை சந்தேகத்திற்கிடமமான குறித்த இருவரிடம் மேற்கொண்ட சோதனையில், அவர்களிடமிருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 7 வெற்றிலை பொட்டலம், ஒரு கையடக்கத் தொலைபேசி, ஒரு சார்ஜர், 9 லைட்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சிறைச்சாலை சுவருக்கு மேலாக வீசுவதற்காக குறித்த பொருட்களை கொண்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் நீர்கொழும்பைச் சேர்ந்த 31 வயதானவர் என்பதோடு, மற்றையவர், 49 வயதான சீதுவையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடு வருவதாக, அஜித் ரோஹண மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad