இலங்கை அரசியல் அமைப்பு சீர் திருத்தத்தில் சிறுபான்மை மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

இலங்கை அரசியல் அமைப்பு சீர் திருத்தத்தில் சிறுபான்மை மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் - இராதாகிருஸ்ணன்

இலங்கை அரசியல் அமைப்பு சீர் திருத்தத்தில் மலையக மக்கள் வடகிழக்கு மக்கள் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். இந்த குழுவிற்கு யோசனைகளை முன்வைக்கின்ற பொழுது சிறுபான்மை மக்கள் எதிரநோக்குகின்ற பிரச்சினைகளை சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் அதாவது மலையக மக்கள் வடகிழக்கு மக்கள் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்ற விடயங்கள் தொடர்பாக யோசனைகளை அனைவரும் இணைந்து முன்வைத்து அலுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மலையக மக்கள் முன்னணி அண்மையில் புதிய அரசியல் யாப்பிற்கான அரசியல் சீர் திருத்த நிபுணர் குழுவிடம் எங்களுடைய யோசனைகளை முன்வைத்துள்ளது. 

இந்த விடயத்தில் நாங்கள் இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களான மலையக மக்கள் வடகிழக்கு தமிழர்கள் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் பொதுவான பல விடயங்களை முன்வைத்துள்ளோம்.

அதே போல ஏனைய சிறுபான்மை கட்சிகளும் சிறுபான்மை மக்கள் அந்தந்த பகுதிகளில் எதிர்நோக்குகின்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி தங்களுடைய யோசனைகளை முன்வைக்கின்ற பொழுது அவற்றையும் உள்ளடக்க முடியுமாக இருந்தால் அது ஒரு அலுத்தத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

எதிர்காலத்தில் இலங்கையில் சிறுபான்மை மக்களாகிய மலையக மக்கள் வடகிழக்கு தமிழர்கள் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய ஒரு கால கட்டமாகவே நான் இதனை பார்க்கின்றேன்.

இன்று இந்த நாட்டில் வடகிழக்கு மக்களுக்கு அவர்களுடைய உரிமை சார்பான பிரச்சினைகள் ஒவ்வொருநாளும் அதிகரித்து வருகின்றது. அதேபோல முஸ்லிம் மக்களுடைய ஜனாசா நல்லடக்கம் தொடர்பாக பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது.

பிரதமர் ஜனாசா நல்லடக்கம் செய்ய முடியும் என பாராளுமன்றத்தில் கூறுகின்றார் ஆனால் அமைச்சர்கள் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறுகின்றார்கள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளவர்கள் நல்லடக்கம் செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். எனவே முன்னுக்கு பின் முரணான விடயங்கள் நடைபெறுகின்றது.

மறுபுறுத்தில் வடகிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் அடையாளங்களை இல்லாது செய்வதற்கு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. மேலும் மலையக மக்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமையில் இருக்கின்றோம்.

எனவே நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் எங்களுடைய எந்தவிதமான விடயத்தையும் வெற்றி கொள்ள முடியாமல் போய்விடும். எங்கள் அனைவருக்கும் தனித்தனியான அரசியல் இருக்கின்றது.ஆனால் பொதுவான விடயங்களில் நாம் இணைந்து செயற்படவேண்டும்.இல்லாவிட்டால் நாம் எதனையுமே பெற்றுக் கொள்ள முடியாது.

எனவே நீண்ட இடைவேளையின் பின்பு தற்பொழுது புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.இதன் மூலமாக சிறுபான்மை மக்கள் உயரிய பயனை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படியானால் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மலையக நிருபர் தியாகு

No comments:

Post a Comment