வெளிநாடு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை துரிதமாக வழங்க நடவடிக்கை - கெஹலிய ரம்புக்வெல - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

வெளிநாடு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை துரிதமாக வழங்க நடவடிக்கை - கெஹலிய ரம்புக்வெல

உயர் கல்வி நடடிக்கைக்காக வெளிநாடு செல்லவுள்ள இலங்கை மாணவர்களுக்கு நாட்டில் துரிதமாக கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நிலைமையில் மாணவர்கள் மீண்டும் அங்கு செல்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு செல்லும் மாணவர்களுக்கு துரிதமாக தடுப்பூசியை வழங்குவதற்கும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மார்ச் மாதத்திற்கு முன்னர் தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற்று ஏப்ரல் மாதத்தில் நாம் திட்டமிட்ட வகையில் எண்ணிக்கை தடுப்பூசியை ஏற்ற முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்திடம் பண வசதி இல்லை என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் தெரிவித்தார்.

யாராவது அரசாங்கத்திற்கு தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு பண வசதி இல்லை மருந்து களஞ்சிய வசதி இல்லை என கூறினால் அது முற்றிலும் தவறான விடயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் தொடர்பில் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க கூடிய ஆற்றல் இருப்பதை சமகால அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment