(செ.தேன்மொழி)
களனி கங்கையில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (01) நவகமுவ - மாபிடிகம பாலத்திற்கு அருகில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்களுள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிரிழந்த நிலையில், அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
காணாமல் போயிருந்த இளைஞர்களிருவரும் கடற்படையின் சுழியோடிகளால் இன்று செவ்வாய்கிழமை காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ரணால பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரும், கலேவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் ஒருவன் நேற்று தொழில் நிறுவனம் ஒன்றில் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொண்டு அதில் தெரிவான சந்தோசத்தில் களனி கங்கையின் மாபிடிகம பாலத்திற்கு அருகில் மது விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
சம்பவத்தின் போது மது அருந்திக் கொண்டிருந்துள்ள மூன்கு நண்பர்களுள், ஒருவர் அதிக போதையின் காரணமாக களனி கங்கையின் கரையில் உறங்கியுள்ளதுடன், மற்றைய இருவரும் நீராடிக் கொண்டே மது அருந்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment