இனிமேல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி வர வேண்டாம் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

இனிமேல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி வர வேண்டாம்

புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியம் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று இனங்காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் இனிமேல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்கள் மற்றும் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இனிமேல் தேவையற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad