கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய ஊழியர் ஒருவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் இந்திய செயலக ஊழியர் ஒருவருக்கு நேற்றையதினம் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் தற்போது இலங்கை அரசாங்கத்தின் மருத்துவ மையமொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறிப்பிட்ட ஊழியரின் கடமைகளை கவனத்தில் கொள்ளும் போது அவர் உயர் ஸ்தானிகராலய கட்டடத்துடனும் அதிகாரிகளுடனும் குறைந்தளவிலான தொடர்பினையே கொண்டிருக்கும் நிலையில் முதன்மை தொடர்பாளர்கள் சுகாதார பாதுகாப்பு நியமங்களுக்கு அமைவாக பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் ஏனைய நடைமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்19 நிலைமையை கருத்தில் கொண்டு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மிகவும் குறைந்த வலுவுடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வருகிறது.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளுக்கு அமைவாக அவசியமான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை உயர் ஸ்தானிகராலய வளாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளது.

கொவிட்19க்கு எதிரான போராட்டங்களில் சாத்தியமான சகல ஒத்துழைப்புக்களையும் இலங்கைக்கு வழங்குவதற்கும் உதவுவதற்கும் இந்தியா உறுதியுடன் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad