கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென்கிறது உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்

புதிய கொரோனா பாதிப்புக்கள் சர்வதேச அளவில் குறைந்து வருவது, அந்நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என காட்டுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் மேலும் தெரிவிக்கையில், தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய கொரோனா பாதிப்புகள் சர்வதேச அளவில் குறைவாக பதிவாகி வருகிறது. 

சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும் உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது ஊக்கப்படுத்தும் வகையிலான செய்திகளை காண முடிகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையே இந்த செய்திகள் காட்டுகின்றன.

உருமாறிய கொரோனா பரவினாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நமக்கு கடந்த 3 வார எண்ணிக்கை பரிந்துரைக்கிறது என்றார். 

அதேவேளையில், கட்டுப்பாடுகளை துரித கதியில் தளர்த்துவது கொரோனா வைரஸ் மீண்டும் முழு வீரியத்துடன் பரவுவதற்கு வழிவகுத்து விடும் எனவும் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment