பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

சீனா 5 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிய நிலையில், பாகிஸ்தானில் இன்று (3) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

சீனா 5 லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நேற்றுமுன்தினம் வழங்கியது. இந்த நிலையில் இன்று பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார். 

முதலில் சுகாதாரத் பணியாளர்களுக்கும், அதன்பின் மூத்த குடிமக்களுக்கும், அதன்பின் மற்றவர்களுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதம் வரை செயல்திறன்மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 500 தடுப்பூசி மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது அதிகரிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது,

No comments:

Post a Comment