கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டது ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டது ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை இன்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

2017 மற்றும் 2018 நிதியாண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தொடர்பான கணக்காய்வு அறிக்கை மற்றும் செயற்திறன் குறித்து இங்கு மதிப்பாய்வு செய்யப்படும்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதற்கு முன்னரும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இன்றையதினம் பிற்பகல் 02.00 மணிக்கு கோப் குழு கூடவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad