நாய், பூனைகளிடமும் கொரோனா தொற்று பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

நாய், பூனைகளிடமும் கொரோனா தொற்று பரிசோதனை

தென் கொரிய தலைநகரில் நோய் அறிகுறிகள் இருந்தால் செல்லப் பிராணிகளான பூனை மற்றும் நாய்கள் மீதும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்று அந்த மாநகர அரசு தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் விலங்கு ஒன்றிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரின் செல்லப் பிராணியிடம் காய்ச்சல் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் மாத்திரம் அவை சோதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது வீட்டில் தனிமைப்படுத்தப்படல் வேண்டும்.

மனிதர்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு இடையே கொவிட்–19 பரவுவதற்கான ஆதாரம் இல்லாததால் செல்லப் பிராணிகளை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று நோய்த் தடுப்பு அதிகாரி ஒருவரான பார்க் யூ மி செய்தியாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்தார்.

தென்கிழக்கு நகரான ஜின்ஜுவின் மதஸ்தானம் ஒன்றில் வளர்ந்த பூனை ஒன்றிடம் தொற்று இருப்பது கடந்த மாத ஆரம்பத்தில் உறுதி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad