ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வேறுபட்ட பிராந்தியங்களில் இருக்கும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைப்பதற்கும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வி தொடர்பான சவால்களுக்கு பதிலளிக்கும் அமெரிக்க நிதியுதவியிலான இணையவழி கல்வித் தளமொன்றை (online education platform) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் Alaina B. Teplitz செவ்வாய்க்கிழமை 23.02.2021 திறந்து வைத்துள்ளார்.
இதற்கென வவுனியாவிலும் திருகோணமலையிலும் ஒவ்வொரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அதிநவீன வகுப்பறைகள் USAID ஊடாக அமெரிக்க மக்களிடமிருந்து வழங்கப்பட்ட டிஜிட்டல் காட்சியமைப்புகள், ஒலி உபகரணங்கள், மேசைகள், மற்றும் கதிரைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளன.
தொற்றுநோய் பரவலொன்றின்போது கல்வி இலக்குகளை அடைவதற்கான சவால்களை சமாளிக்க வசதியற்ற பாடசாலைகளுக்கு இந்த 20,000 அமெரிக்க டொலர் முன்னோடித் திட்டம் உதவுகிறது.
இந்த “ஸ்மார்ட் வகுப்பறைகள் சிங்களம் மற்றும் தமிழ் பேசுபவர்களை இணைப்பதுடன் தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.
அத்துடன் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான கல்விக்கான பிள்ளைகளின் அணுகலுக்கு நேரடியாக உதவுகிறது என அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
மேலும் இது அவர்களுக்கு புதிய உலகமொன்றை திறந்து வைப்பதுடன், ஒருவருக்கொருவருடனும் அவர்களது சமூகங்களுடனும் உறுதியான தொடர்புகளை கட்டியெழுப்பி சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையேயான இணைப்பையும் மேம்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமது சமூகங்களில் நீடித்த அமைதிக்கு உதவக்கூடிய வகையில், தற்சார்பு, ஸ்திரத்தன்மையை பலப்படுத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு உதவுவதற்கான அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான நீண்டகால பங்காண்மையின் அங்கமொன்றாக இந்த ஸ்மார்ட் வகுப்பறை செயற்பாடு காணப்படுகிறது” எனவும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment