நாட்டில் எதிர்வரும் மாதங்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை தோற்றுவிக்கும் - எச்சரிக்கின்றார் அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

நாட்டில் எதிர்வரும் மாதங்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை தோற்றுவிக்கும் - எச்சரிக்கின்றார் அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் எதிர்வரும் மாதங்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை தோற்றுவிக்கும். மக்கள் மத்தியில் தொழில் துறைக்கான கேள்வி அதிகளவில் நிலவும், தொழிற்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நிதி மூலதனச்சந்தை மற்றும் தொழில் வழங்கல் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் மாதங்களில் நெருக்கடியான நிலையினை எதிர்கொள்ள நேரிடும். நாட்டின் பல துறைகள் இன்னும் முழுமையாக மீள திறக்கப்படவில்லை.

எதிர்வரும் காலங்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. செயற்திட்டங்களை பயனுடையதாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

இவ்வருடம் 6 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களுக்காக ஒவ்வொரு துறையில் இருந்தும் வெளியேறுவார்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

2010ஆம் ஆண்டை காட்டிலும் 2020 ஆம் ஆண்டு வியாபார தட்டுப்பாடு 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு தொழில் முயற்சியாளர்கள் ஊடாக 2020 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய 813 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வருவாயாக கிடைக்கப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad