உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிறையிலிருக்கும் சந்தேக நபரிடம் தொலைபேசிகள் - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிறையிலிருக்கும் சந்தேக நபரிடம் தொலைபேசிகள்

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 05 தொலைபேசிகள், 11 பெட்டரிகள், 10 சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (04) இரவு 8.45 மணியளவில் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கேகாலை சிறைச்சாலையின் A4 பிரிவின் விஷேட சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 03 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad