களனிவெளி பாதையில் இன்று முதல் மேலதிகமாக மற்றுமொரு ரயில் சேவை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

களனிவெளி பாதையில் இன்று முதல் மேலதிகமாக மற்றுமொரு ரயில் சேவை ஆரம்பம்

(இராஜதுரை ஹஷான்)

களனிவெளி ரயில் சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக ரயிலொன்று மேலதிகமாக களனிவெளி பாதையில் இன்று முதல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரின் பங்குப்பற்றுடலுடன் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டதாவது, களனி வழி பாதையில் ரயில்கள் குறைவான அளவில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால் அலுவலக ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்ளுக்குள்ளாகுகிறார்கள்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் களனிவெளி பாதை ரயில் சேவை அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு மேலதிகமாக ரயிலொன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமயை காலை 7 மணிக்கு ஹோமாகம ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 8 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும், மீண்டும் மாலை 6.18 கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஹோமாகம நோக்கி ரயில் நாளாந்தம் புறப்படும். ஞாயிற்றுகிழமை மாத்திரம் இந்த ரயில் சேவையில் ஈடுபடமாட்டாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயிலுக்குள் சமூக இடைவெளியை பேணும் வகையில் ரயில் சேவை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய ரயில்களிலும் அலுவலக ரயில் சேவையினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment