ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக சிவஞானசோதி நியமனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக சிவஞானசோதி நியமனம்

சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும். 

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளராக கடமையாற்றிய வே. சிவஞானசோதி இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் தற்போது பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளடங்கலாக 3 உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad