வவுனியா நகர சபை மைதானத்தில் இன்று (04.02.2021) காலை 7.30 மணியளவில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கீதம் சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும், தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் பாடப்பட்டதுடன் தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன் கலந்துகொண்டதுடன், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், வவுனியா, செட்டிகுளம், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
அணிவகுப்பு கொரோனா அச்சம் காரணமாக இடம்பெற்றிருக்கவில்லை.
நிகழ்வின் இறுதியில் பிரதம விருந்தினரால் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.
No comments:
Post a Comment