எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தமைக்காக இரு இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் இரத்து - மலையேறுவதற்கான தடையும் விதிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தமைக்காக இரு இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் இரத்து - மலையேறுவதற்கான தடையும் விதிப்பு

இந்தியாவைச் சேர்ந்த இரு மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ்களை நேபாளம் இரத்து செய்துள்ளது.

மேலும் அவர்கள் இருவம் மற்றும் அவர்களது குழுத் தலைவரையும் நாட்டில் மலையேறுவதற்கு ஆறு ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நரேந்தர் சிங் யாதவ் மற்றும் சீமா ராணி கோஸ்வாமி ஆகியோர் 2016 வசந்த காலத்தில் உலகின் மிக உயரமான மலையின் உச்சியை அடைந்ததாகக் கூறினர், அந்த நேரத்தில் நேபாளத்தின் சுற்றுலாத் துறை அவர்களது சாதனைக்கு சான்றளித்தது.

ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவின் மதிப்புமிக்க டென்சிங் நோர்கே சாதனை விருதுக்காக யாதவ் பரிந்துரைக்கப்பட்டபோது, இந்திய மலையேறுபவர்களும் ஊடகங்களும் சீற்றத்துடன், 2016 ஏறுதலுக்கான யாதவின் புகைப்பட ஆதாரங்களின் பகுப்பாய்வுகளைப் பகிர்ந்துகொண்டு புகைப்படங்கள் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டின.

அதனால் எவரெஸ்ட் சிரகத்தை அடைந்தமைக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட சாதனை விருது திரும்பப் பெறப்பட்டதுடன், அது தொடர்பில் விசாரணைகள் தொடங்கியது.

நேபாளத்தின் சுற்றுலா அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரா நாத் ஆதிகாரி, தங்கள் விசாரணைகள் மற்றும் பிற ஏறுபவர்களுடனான விசாரணைகளில் நரேந்தர் சிங் யாதவ் மற்றும் சீமா ராணி கோஸ்வாமி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டவில்லை என புதன்கிழமை அறிவித்தார்.

அவர்கள் உச்சத்திற்கு ஏறியதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அத்துடன் அவர்கள் நம்பகமான புகைப்படங்களை சமர்ப்பிக்க கூட அவர்கள் தவறிவிட்டனர் என்று ஆதிகாரி கூறினார்.

அதனால் குறித்த இரு மலை ஏறுபவர்களுக்கும் அவர்களது குழுத் தலைவருமான நபா குமார் புக்கோனும் நேபாளத்தின் மலைகளில் ஏறுவதற்கு ஆறு ஆண்டுகாள தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு 2016 மே மாதம் முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.

8,848.86 மீ (29,032 அடி) மலையின் உச்சியை அடைவது உலகெங்கிலும் உள்ள மலையேறுபவர்களுக்கு ஒரு பிரகாசமான சாதனையாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad