அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் - இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் - இலங்கை ஆசிரியர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அறிக்கையினால் பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. இவ்வறிக்கையினை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உழைக்கும் மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டவாட்சி கோட்பாட்டுக்கு அமைய செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சட்டத்திற்கு முரணாக செயற்படுகிறது. அரசியல் பழிவாங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பொதுச் சட்ட கோட்பாட்டுக்கு முரணானது. அறிக்கையினை செயற்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையினை சவாலுக்குட்படுத்தும் விடயங்கள் அரசியல் பழிவாங்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை செயற்படுத்தினால் நீதித்துறை கேள்விக்குற்படுத்தப்படும். 

அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் விசேட அதிகாரம் புதிய அரசியலமைப்பின் ஊடாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபணர் குழுவினரிடம் முன்வைத்துள்ளோம்.

ஒரு சம்பவம் குறித்து ஆராய விசேட ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுமாயின் பொலிஸ் திணைக்களம், நீதிமன்றம் ஆகிய துறைசார் தாபனங்கள் எதற்கு. அவ்வாறானின் இத்தாபனங்கள் சுயாதீனமற்ற வகையில் செயற்படுகிறா என்ற சந்தேகம் தோற்றம் பெறுகிறது.

ஆகவே அரசியல் பழிவாங்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கொவிட்-19 தடுப்பூசி ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை வெளிகள சேவையாளர்களுக்கு பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் வழங்குவதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாரத்துடன் மாதம் முடிவடையவுள்ளது. ஆனால் தடுப்பூசி வழங்கப்படவில்லை. 

கொவிட்-19 தடுப்பூசியை அரசியல்வாதிகள் பகிர்ந்து கொள்கிறார்கள். யாருக்கு தடுப்பூசிகள் கட்டம்கட்டமாக வழங்கப்பட வேண்டும் என்பதை கூட அரசியல்வாதிகள் தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டம் முழுமைப் பெறாத நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட பாடத்திட்டங்ளை உள்ளடக்கி தற்காலிகமான பாடத்திட்டத்தை தயாரிக்குமாறு கவ்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்தோம். இதுவரையில் எவ்விதமான சாதக தீர்வும் கிடைக்கப் பெறவில்லை. 

நிகழ்நிலை (ஒன்லைன்) முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கை வசதி படைத்த மாணவர்களுக்கு மாத்திரமே பயனுடையதாக காணப்பட்டுள்ளது. இலவச கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் கொள்கையில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment