அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் கூறிய கருத்து உண்மையே, ஐ.நாவில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்கிறார் அமைச்சர் தினேஷ் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் கூறிய கருத்து உண்மையே, ஐ.நாவில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்கிறார் அமைச்சர் தினேஷ்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இம்முறையும் இலங்கைக்கு கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாஸா விவகாரம் இதில் தாக்கத்தைச் செலுத்தாது எனவும், முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அதேவேளை, கொவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறிய கருத்து உண்மையே எனவும் அவர் குறிப்பிட்டார். 

சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரையையே பிரதமர் தெரியப்படுத்தினார் எனவும், இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தினகரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad